"சிறைத்துறை அதிகாரிகளின் முயற்சியால் , கைதிகளின் மறுவாழ்வு மையமாக மாறிய மதுரை மத்திய சிறை! - Seithipunal
Seithipunal


மதுரை மத்திய சிறை 150 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.  இந்த சிறையில் ஆயுள் கைதிகள் விசாரணை கைதிகள் என சுமார் 1800க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டு இருக்கின்றனர்.

தற்போது சிறைத்துறை வளாகம் அங்கு பணிபுரியும் உயர் அதிகாரிகளின் முயற்சியின் மூலம் கைதிகளின் மறுவாழ்வு மையமாக மாறி உள்ளது.

பல்வேறு குற்றங்களை செய்து தண்டனை அனுபவித்து வரும் கைதிகளுக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையில் இந்த சிறை தற்போது மாறி உள்ளது.

தண்டனை அனுபவித்து வரும் கைதிகளை நல்வழிப்படுத்தும் வகையில் சிறை நிர்வாகம் சார்பில், கணினி மற்றும் பேக்கரி பொருட்கள், சுங்குடி சேலை, கைலி, பெண் கைதிகள் மூலம் குழந்தைகள் விளையாட்டு பொருட்கள், சுடிதார், நைட்டி, வயர் கூடை, வத்தல் பொருட்கள் உள்ளிட்டவை தயாரிக்கும் பல்வேறு தொழில் பயிற்சிகளை அளித்து உற்பத்தி செய்கின்றனர்.

கைதிகள் உற்பத்தி செய்யும் அனைத்து பொருள்களும் மக்களுக்கு நியாயமான விலையில் கிடைக்க சிறைத்துறை சார்பில் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் சிறை அங்காடி என்ற திட்டத்தை சிறைத்துறை டிஜிபி அம்ரேஷ் பூஜாரி மேற்கொண்டார். இந்த அங்காடி சிறை வளாகத்தின் முன் பகுதியில் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

கடந்த மாதம் 26 ஆம் தேதி திறக்கப்பட்ட இந்த சிறைப்பொருள் விற்பனை நிலையத்தில் மதுரை சிறையில் இருந்து சுங்குடி சேலை, கைலிகள், ரெடிமேட் சட்டைகளும், பேக்கரி பொருட்களும், பெண் கைதிகள் மூலம் குழந்தைகளுக்கான விளையாட்டு, சுடிதார், நைட்டிகள், வயர்கூடை, வத்தல் பொருட்களும் தயாரிக்கப்பட்டு விற்கப்படுகின்றன.

மதுரை சிறையில் தகுதியான கைதிகளை தேர்ந்தெடுத்து தேவையான பல பொருட்களை உற்பத்தி செய்கிறோம் என்று, சிறை டிஐஜி பழனி தெரிவித்துள்ளார்.

மேலும், நாள் ஒன்றுக்கு ரூ. 2 லட்சம் விற்பனை இலக்காக நிர்ணயிக்கப்பட்டு, பணியில் ஈடுபடும் கைதிகளுக்கு போதிய வருவாயும் கிடைத்துள்ளதாகவும் டிஐஜி பழனி தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Madurai Central Jail Looks Like A Rehabilitation Center


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->