ஸ்டெர்லைட் துப்பாக்கி சூட்டிற்கு இவர் மட்டும் காரணமா? சிபிஐ-க்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!! - Seithipunal
Seithipunal


கடந்த 2018 ஆம் ஆண்டு தூத்துக்குடியில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்ற கோரிக்கையோடு பொதுமக்கள் நடத்திய போராட்டம் 100வது நாள் எட்டியதை அடுத்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் ஸ்டெர்லைட் ஆலையை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டனர்.

இந்த முற்றுகைப் போராட்டத்தின் போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 15 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் பலர் காயமடைந்தனர். இந்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது.

அதன் அடிப்படையில் சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை தொடங்கிய நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாவட்ட முன்னாள் செயலாளர் கே.எஸ் அர்ச்சுனன் துப்பாக்கி சூட்டிற்கு காரணமான மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்டவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும் என புகார் மனு அனுப்பினார்.

அந்த புகாரின் மீது சிறிய நடவடிக்கை எடுக்காததால் நீதிமன்றத்தில் வழக்கு தொடங்கப்பட்டது. அதன் பிறகு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளர் அளித்த புகாரின் அடிப்படையிலும் சிபிஐ விசாரணை மேற்கொண்டது.

இந்த விசாரணை முடிவில் காவல் ஆய்வாளர் திருமலை என்பவர் மட்டுமே குற்றவாளி என மதுரை சிபிஐ நீதிமன்றத்தில் இறுதி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. சிபிஐ இந்த நடவடிக்கை விதிமுறைகளுக்கு எதிரானது எனவும் அதனை ரத்து செய்ய வேண்டும் எனவும், துப்பாக்கி சிப்பிக்கு காரணமான மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், வருவாய் அலுவலர், காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரை குற்றவியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை நடைபெற்று முடிந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மதுரை குற்றவியல் நடுவர் மன்ற நீதிபதி சண்முகையா வழங்கிய தீர்ப்பில் ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு படுகொலை வழக்கில் ஒரு காவல் ஆய்வாளர் மட்டுமே குற்றவாளி என்ற சிபிஐ.,யின் குற்றப்பத்திரிக்கையை நிராகரித்ததோடு, மீண்டும் இந்த வழக்கில் விசாரணை நடத்தி ஆறு மாதத்திற்குள் புதிய இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Madurai Court rejects CBI charge sheet of Sterlite firing case


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->