மதுரையில் கொடூரம்: பெற்ற குழந்தைகளை குத்தி கொலை செய்த தந்தை! அதிர்ச்சி பின்னணி! - Seithipunal
Seithipunal


மதுரை அருகே குடும்பத்தகராறில் பெற்ற குழந்தைகளை தகப்பனே கொலை செய்த சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை அண்ணா நகரில் குடும்பத்தகராறில் தனது இரு குழந்தைகளை குத்தி கொலை செய்துவிட்டு, தந்தை தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

யாகப்பா நகரை சேர்ந்த சேதுபதி - ராஜேஸ்வரி தம்பதி வசித்து வந்துள்ளனர்.

இவர்களுக்கு ரக்ஷனா ஏழு வயது, ரக்ஷிதா ஐந்து வயது என இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன.

தம்பதிகள் சேதுபதி ராஜேஸ்வரிக்கு இடையே குடும்பத்த தகராறு இருந்ததாக சொல்லப்படுகிறது.

சம்பவம் நடந்த இன்று ராஜேஸ்வரி வெளியே சென்ற நிலையில், சேதுபதி கடுமையான மன உளைச்சலில் இருந்ததாகத் தெரிகிறது.

இந்நிலையில், தனது இரண்டு பெண் குழந்தைகளையும் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார் தந்தை சேதுபதி.

இரண்டு பெண் குழந்தைகளும் உயிரிழந்த நிலையில், தற்கொலைக்கு முயன்ற தந்தை சேதுபதி மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Madurai dad kill to daughters


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->