நீதிமன்றத்தின் உத்தரவுகளை செயல்படுத்தவில்லை என்றால் கல்வித்துறை அதிகாரிகள் நேரில் ஆஜராக வேண்டும் - மதுரை உயர்நீதிமன்றம்.!
madurai HC order to education department officers appear court for not implement to court orders
மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த பலர், மதுரை உயர்நீதிமன்றத்தில் அவமதிப்பு மனுக்களை தாக்கல் செய்தனர். அந்த மனுக்களில் தெரிவித்துள்ளதாவது:-
"பல வருடங்களாக தற்காலிக பணியாளர்களாக பணியாற்றி வந்த தங்களது பணியை பகுதிநேர ஊழியர்களாக கருதி, உரிய பணப்பலன்களை வழங்குவது, பள்ளிக்கல்வித்துறை சார்ந்த பதவி உயர்வு உள்ளிட்ட பல உத்தரவுகளை நீதிமன்றம் பிறப்பித்திருந்தது.
இருப்பினும் பள்ளிக்கல்வித்துறை அந்த உத்தரவுகளை பின்பற்றி அதற்கான எந்த ஒரு நடவடிக்கைகளையும் எடுக்கப்படவில்லை. ஆகவே இதற்கான அதிகாரிகள் மீது அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்து இருந்தனர்.
இந்த நிலையில், இந்த மனுக்களை விசாரணை செய்த நீதிபதி தண்டபாணி, பள்ளிக்கல்வித்துறைக்கு நீதிமன்றம் பிறப்பித்த பல்வேறு உத்தரவுகள் நடைமுறைப்படுத்தப்படவில்லை. கடந்த 2018-ம் ஆண்டிலிருந்து தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுக்கள் தற்போது வரை நிலுவையில் உள்ளன.
ஆகவே, நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் படி, உரிய நடவடிக்கைகளை நிறைவேற்றி, அது தொடர்பான அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.
அப்படி இல்லையென்றால், தமிழக அரசின் பள்ளிக்கல்வித் துறை செயலாளர், முதன்மை கணக்காளர், தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் உள்ளிட்டோர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும்" என்று உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை வருகிற 24-ந்தேதிக்கு ஒத்தி வைத்தார்.
English Summary
madurai HC order to education department officers appear court for not implement to court orders