வசதிப்படைத்தவர்களுக்கு தான் கோவிலா? ஏழைகளின் நிலை என்ன? - சராமாரிக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள்..! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் தெரிவித்து இருந்ததாவது:- "திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதத்தில் ஆறு நாட்கள் கந்த சஷ்டி விழா கொண்டாடப்படுகிறது. 

இந்த விழாவின்போது தினமும் 1 லட்சம் பக்தர்கள் திருச்செந்தூர் வந்து செல்கிறார்கள். இந்தக் கோவிலில் சாதாரண நாட்களில் விரைவு தரிசனத்துக்கு ஒரு நபருக்கு ரூ.100 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. விசேஷ நாட்களில் விரைவு தரிசன கட்டணம் இரண்டு மடங்காக, அதாவது ரூ.200 வசூலிக்கப்படுகிறது.

ஆனால், கடந்த ஆண்டு கந்த சஷ்டி விழாவின்போது விரைவு தரிசன கட்டணம் ஒரு நபருக்கு ரூ.1,000 என்று நிர்ணயித்து வசூலித்தனர். இதை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 200 பக்தர்கள் கைதானார்கள். இதையடுத்து கூடுதல் கட்டணம் வசூலிப்பதை கோவில் நிர்வாகம் நிறுத்தி வைத்தது.

இந்த நிலையில், இந்த ஆண்டு கந்த சஷ்டி விழா தொடங்க உள்ளதால் கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் விரைவு தரிசன கட்டணமாக ஒரு நபருக்கு ரூ.1,000 வசூலிக்க முடிவு செய்து இருப்பதாக கோவில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது. கூட்டத்தை கட்டுப்படுத்த கூடுதல் கட்டணம் நிர்ணயம் செய்வது ஏற்புடையதல்ல. 

ஆகவே, கந்தசஷ்டியின்போது தரிசனம் செய்ய கூடுதல் கட்டணத்துக்கு தடை விதிக்க வேண்டும். தரிசனத்துக்கு ஆதார் எண் அடிப்படையில் இணையதளம் வழியாக முன்கூட்டியே டோக்கன் வழங்கவும், இதற்காக சிறப்பு மையங்களை ஏற்படுத்தவும் உத்தரவிட வேண்டும்" என்று அந்த மனுவில் தெரிவித்திருந்தார்.

இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தபோது, கோவில்களில் தரிசனம் செய்வதற்கு ரூ.1,000, ரூ.2,000 என வசூலித்தால், ஏழை பக்தர்கள் நிலை என்ன ஆகும்? அவர்களால் இந்த தொகையை செலுத்த இயலுமா? வசதி படைத்தவர்களுக்கு மட்டும்தான் கோவில்கள் இருக்கிறதா? என்று சராமரியாக கேள்விகளை எழுப்பினர்.

தொடர்ந்து இந்த மனு குறித்து இந்து சமய அறநிலையத்துறை ஆணையர், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் பதில் மனு தாக்கல் செய்யும்படி நீதிபதிகள் உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்த


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

madurai high court justice question rised to thiruchenthur temple speed dharisanam


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->