பதவி உயர்வு குறித்து நிர்வாகம் தான் முடிவு செய்யும்! உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கருத்து.! - Seithipunal
Seithipunal


பதவி உயர்வுக்கான தகுதியான நபர்களை நிர்வாகம் தான் தேர்வு செய்யும் என சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.

மதுரை வளர் நகரில் வசித்துவரக் கூடிய மாவட்ட வருவாய் அலுவலர் முத்து ராமலிங்கம் என்பவர், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், தகுதி இருந்தும் மத்திய அரசு தனக்கு ஐஏஎஸ் பதவி உயர்வு வழங்காமல் இருக்கிறது. எனவே தனக்கு ஐ.ஏ.எஸ். பதவி உயர்வு வழங்க மத்திய அரசின் ஆய்வுக்குழு கூட்டம் நடத்த உத்தரவிட வேண்டும் என கோரி இருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், அரசு ஊழியர்கள் தங்களின் பதவி உயர்வை ஒரு உரிமையாக கோர முடியாது, பதவி உயர்வுக்கான தகுதியான நபர்களை தேர்வு செய்வது நிர்வாகம் தான் என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Madurai High court order


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->