முதன்முறை சிறைக்கு வருபவர்கள் தனியாக வைக்கப்படுகிறார்களா? - மதுரை உயர்நீதிமன்ற கிளை சராமாரிக் கேள்வி?
madurai high court question raised seperate lockup to first time accuest in madurai central jail
உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஜாமீன் மற்றும் முன்ஜாமீன் கோரும் மனுக்களை நீதிபதி பரத சக்கரவர்த்தி விசாரித்து வருகிறார். அதன் படி, இன்று வழக்கம் போல் விசாரணை தொடங்கும் முன்பு மதுரை சரக சிறைத்துறை துணைத் தலைவர் பழனி நேரில் ஆஜரானார்.
அவரிடம், "மதுரை மத்திய சிறையில் முதன்முறையாக சிறைக்கு வருபவர்கள் தனியாக வைக்கப்படுகிறார்களா..?" என்று கேள்வி எழுப்பியதற்கு "மதுரை மத்திய சிறையை பொறுத்தவரை தண்டனை கைதிகள் தனியாகவும், விசாரணை கைதிகள் தனியாகவும் அடைக்கப்படுகிறார்கள். இந்த நடைமுறையே பின்பற்றப்படுகிறது" என்று தெரிவித்தார்.
இதைக்கேட்ட நீதிபதிகள், "ஜாமீன் கோரி வந்த சில வழக்குகளை விசாரித்ததில், அவர்கள் சிறிய வழக்குகளில் சிறையில் இருந்தபோது பெரிய குற்றவாளிகளுடன் ஏற்பட்ட தொடர்பில் மீண்டும் குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக தெரிவித்தனர். இது தவிர்க்கப்பட வேண்டும்.
குற்றச் செயல்களில் ஈடுபட்டு முதன்முறையாக சிறைக்குச் செல்வோருக்கு தனியாக சிறைகளை அமைப்பது குறித்து முடிவு செய்ய வேண்டும். இதனால் அவர்கள் பெரும் குற்றவாளிகளாக மாறுவதை தடுக்கலாம். இதுதொடர்பாக உரிய அறிவுறுத்தல்களை நீதிமன்றம் வழங்கும். அதன் பின்னர் அதுதொடர்பாக ஆலோசனை செய்து உரிய நடவடிக்கை எடுங்கள்" என்று தெரிவித்தார்.
English Summary
madurai high court question raised seperate lockup to first time accuest in madurai central jail