மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 300 கடைகள் அகற்றம்.! மிக பிரமிப்பான பல சிற்பங்கள் கண்ணில் பட்டது.! - Seithipunal
Seithipunal


மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் புது மண்டபத்தில் செயல்பட்டு வந்த 300-க்கும் மேற்பட்ட கடைகள் அகற்றப்பட்டு வருகிறது.

உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் புது மண்டபத்தில் கடைகள் செயல்பட்டு வந்தன. இந்த கடைகளில் ஆக்கிரமிப்புகள் தற்போது அகற்றப்பட்டு வருகிறது.

இந்த புது மண்டபத்தில் தையல்கடை, பாத்திரக்கடைகள், விபூதி-குங்குமம் விற்பனை செய்யக்கூடிய கடைகள், வளையல் கடைகள், மளிகை கடைகள், புத்தகக் கடைகள் உள்ளிட்ட பல்வேறு கடைகள் என 300-க்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வந்தன.

ஸ்மார்ட் சட்டத்தின் கீழ் இவர்களுக்கு மாற்று ஏற்பாடாக குன்னூர் அருகே அவர்களுக்கு இட வசதி செய்யப்பட்டு கொடுக்கப்பட்டுள்ளது. 

400 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த புது மண்டபத்தில் பல பாரம்பரியமிக்க, கலை நுணுக்கங்களுடன் கூடிய சிற்பங்கள் உள்ளன. இதனை காட்சி பொருளாக மாற்றி பாதுகாப்பதற்காக இந்து சமய அறநிலைத்துறை முடிவெடுத்து உள்ளதால், இந்த கடைகளை அகற்றும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

madurai meenatchi amman temple new hall


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->