மொத்தம் 244 பேர்! வசமாக சிக்கிய அதிமுக முன்னாள் அமைச்சர்,  நாம் தமிழர் கட்சியினர்! அதிரடியில் காவல்துறை!  - Seithipunal
Seithipunal


கப்பலூர் சுங்கச்சாவடி முற்றுகை தொடர்பாக, அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மதுரை திருமங்கலம் அருகே கப்பலூர் சுங்கச்சாவடி முற்றுகை தொடர்பாக முன்னாள் அமைச்சர், நாம் தமிழர் கட்சியினர் உள்ளிட்ட  244 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கப்பலூர் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் உள்ளிட்ட 400க்கும் மேற்பட்டோர் நேற்று போலீசாரால் கைது செய்யப்பட்டனர். 

இந்த நிலையில், அனுமதியின்றி கூடியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் உள்ளிட்ட 244 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். 

மேலும் முதுகை போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள், வணிக சங்க நிர்வாகிகள், போராட்டக் குழுவினர் என மொத்தம் 244 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

போராட்டமும், பின்னணியும்: 

கடந்த 2012 ஆம் ஆண்டு, மதுரை - திருநெல்வேலி நான்கு வாழி சாலையில் கப்பலூர் அருகே தேசிய நெடுஞ்சாலை துறை ஆணையத்திற்கு சொந்தமாக சுங்கச்சாவடி ஒன்று அமைக்கப்பட்டது. 

இந்த சுங்க சாவடி அமைக்கும்போதே முறைகேடாக 60 கிலோமீட்டர் தொலைவிற்குள் இரண்டாவதாக இந்த சுங்கச்சாவடி அமைக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. 

மேலும், சுங்கச்சாவடியை ஒட்டி உள்ள மக்கள், திருமங்கலம், தென்காசி, ராஜபாளையம், கப்பலூர் சிப்காட் தொழிற்சாலை வளாகம் செல்ல இந்த சுங்கச்சாவடியை பயன்படுத்த வேண்டும் என்றால் கட்டணம் செலுத்த வேண்டும் என்று சொல்லப்பட்டது.

இதனால் சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும், உள்ளூர்வாசிகளுக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்தது, இதனை அடுத்து இந்த சுங்கச்சாவடியை நிரந்தரமாக அகற்ற வேண்டும் என்று, கப்பலூர், திருமங்கலம் சுற்றுவட்டார பகுதி கிராம மக்கள், வணிகர்கள், கப்பலூர் தொழிற்சாலை உரிமையாளர்கள் போராட்டம் நடத்தினர். 

இதன் காரணமாக கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் உள்ளூர் மக்களின் வாகனங்களுக்கு சுங்கச்சாவடியில் கட்டணம் இல்லாமல் அனுமதி வழங்கப்பட்டது. 

இந்த நிலையில் திடீரென்று கடந்த 10ம் தேதி முதல் கப்பலூர் சுங்கச்சாவடிகள் உள்ளூர் வாகனங்களுக்கும் 50 சதவீத கட்டணம் செலுத்த வேண்டும் என்ற புதிய நடைமுறை அமல்படுத்தப்பட்டதால், மீண்டும் போராட்டம் வெடித்துள்ளது. இதுகுறித்து பேச்சுவார்த்தையும் அரசு தரப்பில் நடந்து வருகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Madurai police case file against ADMK RP Udhayakumar and NTK Members


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->