போலீஸ் ஏட்டய்யா என்று தெரிந்தும் செல்போனை பறித்து அராஜகம்.! யார் பைக்குன்னு தெரியும்ல...  - Seithipunal
Seithipunal


மதுரை மாநகர போக்குவரத்து காவல் ஆய்வாளரான சின்ன கருத்தபாண்டி, போலீஸ் ஏட்டு ஆல்வின் ஜெபஸ்டின் உடன் தல்லாகுளம் வணிக வளாகம் அருகே, வாகன தணிக்கையில் ஈடுபட்டார். 

அப்போது அந்த வழியாக வந்த இரு சக்கர வாகனத்தை நிறுத்தினார். அதில், சிறுவன் பின்னால் அமர்ந்திருக்க, வாகனத்தை ஓட்டிவந்த வாலிபர் ஹெல்மெட் அணியவில்லை. 

இதனையடுத்து, போலீசார் அந்த வாலிபரிடம் விசாரணை மேற்கொண்டு உள்ளனர். அதற்க்கு அந்த வாலிபர் "இது வழக்கறிஞரின் வண்டி, நீங்கள் எப்படி தடுத்து நிறுத்தலாம்?" என்று திமிராக கேள்வி எழுப்பியுள்ளார்.

இதனால் வாலிபருக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், அந்த வாலிபரிடம் போக்குவரத்து ஆவணங்களைக் போலீஸ் ஏட்டு ஆல்வின் ஜெபஸ்டின் கேட்டுள்ளார். 

திடீரென அந்த வாலிபர் ஆல்வின் ஜெபஸ்டினை மிரட்டி செல்போனை பறித்துக்கொண்டு தப்பி ஓடவே, ஆய்வாளர் சின்ன கருத்த பாண்டி விரட்டி சென்று அந்த வாலிபரை மடக்கி பிடித்தார்.

மேலும் அந்த வாலிபரிடம் போலீசார் நடத்திய விசாரணையில்,  யானைக்கல் பகுதியைச் சேர்ந்த கருணாநிதி மகன் வசந்த் (20) என்பது தெரியவந்தது. மேலும், வக்கீல் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டு பணத்தை காட்டியதும் தெரியவரவே, அவரை போலீசார் கைது செய்தனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

madurai police cop mobile robbery


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->