3 நாள் அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவு! - Seithipunal
Seithipunal


வருகின்ற 27ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை மூன்று நாட்களுக்கு மதுரையில் அனைத்து டாஸ்மார்க் கடைகளையும் மூட  மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் மருது சகோதார்கள் மணிமண்டபத்தில், நாளை விடுதலை போராட்ட வீரர்கள் மருது சகோதரர்கள் 223 - ஆவது ஆண்டு நினைவு தினம் அரசு விழாவாக அனுசரிக்கப்படுகிறது. 

மேலும், பல்வேறு சமுதாய அமைப்புகளின் சார்பாக வரும் 27-ம் தேதி காளையார்கோவிலில் உள்ள மருது சகோதார்கள் நினைவிடத்தில் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.

மேலும், ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் அக்.30-ம் தேதி முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை நடைபெறுகிறது.

இந்நிலையில், மருது பாண்டியர் நினைவு தினம் மற்றும் தேவர் ஜெயந்தி குருபூஜை விழாவை முன்னிட்டு, 27ஆம் தேதி முதல் மூன்று நாட்களுக்கு அனைத்து டாஸ்மார்க் மது கடைகளையும், மன மகிழ் மன்றங்கள், தனியார் பார் உள்ளிட்ட அனைத்தையும் மூட மதுரை மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

முன்னதாக முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை, மருது சகோதர்கள் 223 - ஆவது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, 9 நாள்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Madurai Tasmac Shop closed in 3 days


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->