மதுரை : காலையிலேயே வெடித்தது போராட்டம் - 1000 காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் 1957ல் நிறுவப்பட்ட மதுரை விமான நிலையம், சென்னை, திருச்சி ,கோவைக்கு அடுத்து நான்காவது பெரிய விமான நிலையமாக விளங்கி வருகிறது. இந்த விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றி அமைக்க  பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகிறது. .

இதற்கிடையே, மதுரை விமான நிலைய விரிவாக்க பணிக்காக, விமானம் நிலையம் அருகே உள்ள சின்ன உடைப்பு கிராமத்தில் உள்ள 136 வீடுகளை அகற்றுவதற்கான நடவடிக்கைக்காக இன்று காலையில் அதிகாரிகள் அங்கு குவிந்தனர். மேலும் ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நிலம் கையகப்படுத்த வந்த அதிகாரிகளை உள்ளே நுழைய மறுத்து, தங்களுக்கு மீள் குடியமர்வு, 3 சென்ட் நிலம் மாநகராட்சி இடத்திற்குள் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கிராமத்திற்குள் வர அதிகாரிகளை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்ச்சியாக 4-வது நாளான இன்று அங்கு போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், அப்பகுதி பொதுமக்கள் சாலையில் படுத்து போராடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Madurai the protest broke out early in the morning 1000 policemen have been mobilized causing excitement


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->