பாண்டியன் அதிவிரைவு வண்டிக்கு 52 வயது நிறைவு.. 53 ஆவது வருடத்தில் மதுரை - சென்னை இரயில் நாயகன்.!
Madurai To Chennai Pandian Super Fast Express Complete 52 Years Service Pandian Express History
மதுரை - சென்னை இடையே இயங்கும் பாண்டியன் இரயில் சேவை தொடங்கப்பட்டு, இன்றோடு 52 வருடங்கள் நிவர்த்தி பெற்றுள்ளது.
சென்னை - மதுரை மாநகர்களை இணைக்கும் பொருட்டு கடந்த 1969 ஆம் வருடம் அக்டோபர் மாதம் 1 ஆம் தேதி மதுரை - சென்னை, சென்னை - மதுரை வழித்தடத்தில் பாண்டியன் இரயில் சேவை தொடங்கப்பட்டது. மேலும், இந்தியாவிலேயே முதல் முறையாக இந்த ரயிலுக்கு தான் மன்னரின் பெயரும் சூட்டப்பட்டது.
மதுரை மண்ணை ஆண்ட பாண்டியர்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில், பாண்டியன் இரயில் என பெயரிடப்பட்டது. துவக்க காலங்களில் சென்னை - மதுரை இரயில் வழித்தடம் மீட்டர் கேஜ் பாதையாக இருந்த நிலையில், இரயில் இயல்பான வேகத்தில் இயக்கப்பட்டது.
முதலில் இரண்டு நீராவி எஞ்சின் கொண்டு இயக்கப்பட்ட பாண்டியன் இரயிலில், இரண்டு முதல் வகுப்பு பெட்டிகள், 8 முன்பதிவு படுக்கை பெட்டிகள், 1 சரக்கு பெட்டியும் இணைக்கப்பட்டு இருந்தது. பின்னர், நாளடைவில் தேவை அதிகரிக்க படிப்படியாக பாண்டியன் இரயிலும் தன்னை உருமாற்ற தொடங்கியது.
கடந்த 1985 ஆம் வருடம் குளிர்பதன வசதிகள் கொண்ட பெட்டிகள் இணைக்கப்பட்டன. ஒரு முதல் வகுப்பு ஏ.சி பெட்டி மற்றும் இரண்டு டூ டயர், த்ரி டயர் பெட்டிகள் இணைக்கப்பட்டன.
தொடக்கக்காலத்தில் பாண்டியன் ரயில் மீட்டர்கேஜ் பாதையாக இருந்ததால் இயல்பான வேகத்திலேயே அந்த ரயில் இயக்கப்பட்டு வந்தது. இதேபோல் ஆரம்பத்தில் இரண்டு நீராவி எஞ்சின்களை கொண்டு, இயக்கப்பட்ட பாண்டியன் ரயிலில் இரண்டு முதல் வகுப்பு பெட்டிகளும், 8 முன்பதிவு ஸ்லீப்பர் பெட்டிகளும், பார்சல் பொருட்களுக்காக ஒரு பெட்டியும் மட்டுமே இருந்தன.
நாளடைவில் காலத்தின் தேவைக்கருதி படிப்படியாக தன்னை உருமாற்றி நவீனமாக்கி கொண்டது பாண்டியன் ரயில். 1985-ம் ஆண்டு தான் பாண்டியன் ரயிலில் குளிர்சாதன வசதி பெட்டிகள் இணைக்கப்பட்டன. ஒரு முதல் வகுப்பு குளிர்சதான வசதி பெட்டியும், தலா இரண்டு 2 அடுக்கு பெட்டி, 3 அடுக்கு ஏசி பெட்டிகளும் சேர்க்கப்பட்டன.
கடந்த 1998 ஆம் வருடத்தில் மீட்டர் பாதை பிராட் கேஜாக மாற்றம் செய்யப்பட்ட நிலையில், 2002 ஆம் வருடத்தில் இருந்து பாண்டியன் அதிவிரைவு இரயிலாக மாற்றம் செய்யப்பட்டது. இதனால் தென்மாவட்ட மக்கள், மதுரையை சார்ந்த மக்கள் பெரிதும் பலன் பெற்றனர். பாண்டியன் இரயில் வருகிறது என்றாலே மனதில் சந்தோஷமும் அடைந்தனர்.
இன்றுள்ள சூழலில் கொரோனா காரணமாக முன்பதிவு செய்யப்பட்டு இரயில் பயணம் தொடங்கப்படுகிறது.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Madurai To Chennai Pandian Super Fast Express Complete 52 Years Service Pandian Express History