ஊராட்சி மன்ற பெண் தலைவரிடம் செயின் பறிப்பு! போலீசார் தீவிர விசாரணை.! - Seithipunal
Seithipunal


மதுரை, அலங்காநல்லூர் அச்சம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஸ்ரீசுதா முருகன் அப்பகுதியில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். 

அப்போது அவரை பின்தொடர்ந்த இரண்டு வாலிபர்கள் இரு சக்கர வாகனத்தில் வேகமாக வந்து ஸ்ரீ சுதா முருகனை கீழே தள்ளி அவரது கழுத்தில் இருந்த 4 சவரன் தங்கச் செயினை பறித்துச் சென்றனர். 

பின்னர் இதுகுறித்து ஊராட்சி மன்ற தலைவி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

மேலும் அப்பகுதியில் இருந்த சி.சி.டிவி கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர். ஊராட்சி மன்ற தலைவியிடம் மர்ம நபர்கள் செயின் பறிப்பில் ஈடுபட்ட நிகழ்வு அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Madurai woman Panchayat council chain snatched


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->