மனைவியின் பிரசவத்திற்கு கணவருக்கும் லீவ்..!! தனிச் சட்டம் இயற்ற உயர்நீதிமன்றம் பரிந்துரை.!! - Seithipunal
Seithipunal


கணவர்களுக்கும் மனைவியின் பிரசவ காலத்தில் விடுமுறை அளிக்க தனி சட்டம் உருவாக்குவது அவசியம் என சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள கடையம் காவல் நிலைய ஆய்வாளர் சரவணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில் தனது மனைவியின் பிரசவத்திற்காக மே 1 முதல் 30 வரை விடுமுறை அளிக்கப்பட்டது. ஆனால் தனது மனைவிக்கு மே 31ஆம் தேதி குழந்தை பிறந்த‌தால் பணிக்கு திரும்ப முடியவில்லை.

இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் அனுப்பியும் பணியில் இருந்து ஓடி விட்டதாக கூறி விளக்கம் கேட்டு அழைப்பாணை அனுப்பினர். உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தும் பணியில் இருந்து சென்று விட்டதாக அழைப்பானை அனுப்பப்பட்டதை ரத்து செய்ய வேண்டும் என அந்த மனுவில் தெரிவித்து இருந்தார்.

இந்த மனு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி எல்.விக்டோரியா கௌரி அமர்வின் முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி மனைவியின் மகப்பேறு காலத்தில் கணவன் உடன் இருப்பது மிக அவசியம்.

பல்வேறு நாடுகளில் மகப்பேறு காலத்தில் கணவன் மனைவி இருவருக்கும் விடுப்பு வழங்கப்படுகிறது. எனவே கணவர்களுக்கு விடுப்பு வழங்க தனி சட்டம் உருவாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கை பொறுத்தவரை பொறுப்புள்ள கணவராக காவல் ஆய்வாளர் சரவணன் செயல்பட்டுள்ளார். எனவே காவல்துறை அனுப்பியுள்ள அழைப்பாணையை ரத்து செய்வதாக உத்தரவிட்ட நீதிபதி தமிழக அரசுக்கு தனி சட்டம் இயற்ற பரிந்துரை செய்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MaduraiHC opined that husband should be given leave during wife delivery


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->