ஆகம விதிகளுக்கு எதிரான அர்ச்சகர்கள் நியமனம் செல்லாது.. உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு அரசால் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற அடிப்படையில் நியமனம் செய்யப்பட்ட பிரபு மற்றும் ஜெயபாலன் ஆகியோரின் நியமனத்தை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. 

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் குமாரவயலூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தமிழ்நாடு அரசால் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற அடிப்படையில் நியமனம் செய்யப்பட்ட பிரபு மற்றும் ஜெயபாலன் நியமனங்களை எதிர்த்து நீண்ட நாட்களாக அர்ச்சகர்களாக உள்ள கார்த்திக் மற்றும் பரமேஸ்வரன் ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர்.

அந்த மனுவில் ஸ்ரீரங்கம் குமாரவயலூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் தமிழ்நாடு அரசு அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டத்தின் கீழ் பிரபு மற்றும் ஜெயபாலன் என்பவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஆகம விதிகளுக்கு முரணாகவும், ஏற்கனவே பணிபுரிந்து வரும் தங்களை அர்ச்சகர்களாக தமிழக அரசு நியமனம் செய்ய உத்தரவிட கோரியும் அந்த மனுவில் வலியுறுத்தி இருந்தனர்.

இந்த மனு இன்று உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர் சாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்த பொழுது குமாரவயலூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பிரபு மற்றும் ஜெயபாலன் ஆகியோர் தாங்கள் 2021 ஆம் ஆண்டு அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்ட நிலையில் இந்த வழக்கு 2022 ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த வழக்கை உயர் நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளக் கூடாது என வாதிட்டனர். 

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சாமிநாதன் "கார்த்திக் மற்றும் பரமேஸ்வரன் ஆகியோர் நீண்ட நாட்களாக சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பணியாற்றி வரும் நிலையில் ஆகம விதிகளுக்கு முரணாக பிரபு மற்றும் ஜெயபாலன் ஆகியோர் அர்ச்சகர்களாக தமிழக அரசால் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே மேற்கண்ட இருவரின் நியமங்களை ரத்து செய்வதோடு கார்த்திக் மற்றும் பரமேஸ்வரன் ஆகியோர் அர்ச்சகர்களாக நியமிப்பது குறித்து 8 வாரங்களுக்குள் சுப்பிரமணிய சுவாமி கோயில் அறங்காவலர் பதிலளிக்க வேண்டும்" என உத்தரவிட்ட நீதிபதி இந்த வழக்கை முடித்து வைத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MaduraiHC order priests appointment canceled against agama rules


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->