ஆவின் பணி நியமன ஆணைகள் ரத்து செல்லும்! மதுரை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனமான ஆவின் நிறுவனத்தின் மதுரை, விருதுநகர், திருச்சி உள்ளிட்ட மண்டலங்களில் கடந்த ஆட்சியில் பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டனர். அதில் கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு மதுரை மற்றும் விருதுநகர் ஆவின் பணியாளர்கள் நியமனத்தை தமிழக அரசு ரத்து செய்தது.

இதற்கு எதிராக பணியில் இருந்து நீக்கப்பட்டோர் தங்களுக்கு மீண்டும் பணி வழங்க கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி பணி நீக்க உத்தரவில் தலையிட மறுத்து மனுக்களை தள்ளுபடி செய்தார். 

தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து ஆவின் பணியாளர்கள் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீடு செய்தனர். இதை விசாரித்து நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் டி.பரத சக்கரவர்த்தி அமர்வு மதுரை ஆவினில் 47 பேர் பணியாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் ஆவின் பணிக்காக விண்ணப்பங்கள் பதிவு தபால் அல்லது விரைவு தபாலில் அனுப்பி இருக்க வேண்டும். ஆனால் 33 பேர் விண்ணப்பங்கள் பதிவு தபால் அல்லது விரைவு தபாலில் அனுப்பவில்லை. அவர்களின் விண்ணப்பங்களும் பெறப்பட்டுள்ளது. மேலும்எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டதில் முறைகேடு நடைபெற்றுள்ளது. 

விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பங்கள் முறையாக முழுமையாக பூர்த்தி செய்யவில்லை. எழுத்துத்தேர்வு முடிந்ததும் தேர்வு முடிவுகளை குப்பை தொட்டியில் வீசிவிட்டு நியமனம் செய்ய வேண்டியவர்களிடம் நேரடியாக விண்ணப்பம் பெற்றுக் கொண்டு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மதுரை ஆவனில் தேர்வு முறைகேடு மட்டுமில்லாமல் குற்ற சதியும், ஆவணங்களை திருத்தியதும் உட்பட பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதால் முறைகேடான நியமனங்களை ரத்து செய்து அதற்கு காரணமான அலுவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

இதுபோன்ற அலுவலர்களை சுதந்திரமாக நடமாடவிட்டால் முறைகேடுகளை அவர்கள் தொடர்வர். மதுரை ஆவின் பணியாளர் தேர்வு முறைகேடு தொடர்பாக உத்தரவு நகல் கிடைத்த 48 மணி நேரத்தில் ஆவின் பொது மேலாளர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸில் புகார் அளிக்க, அதன் அடிப்படையில் போலீஸார் உடனடியாக வழக்கு பதிவு செய்ய வேண்டும்" என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

MaduraiHC order to cancel aavin job appointment order


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->