#BREAKING || இந்து அல்லாதவருக்கு பழனி கோவிலுக்குள் அனுமதியில்லை.!! நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!!
Maduraihc ordered non hindus not allowed in Palani murugar temple
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அமைந்துள்ள அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி முருகன் கோவிலுக்குள் இந்து அல்லாதூர் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என வைக்கப்பட்ட பேனரை அகற்றக் கோரியும் அனைவரையும் கோவிலுக்குள் அனுமதிக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஸ்ரீமதி அமர்வின் முன்பு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் இன்று அந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது இந்து அல்லாதோர் இந்து கடவுள் மீது நம்பிக்கை அல்லாதவரை பழனி முருகன் கோவில் கொடிமரம் தாண்டி உள்ளே அனுமதிக்க கூடாது.
இந்து அல்லாதவர் கோயிலுக்குள் நுழைய தடை என்ற பதாகையை பல்வேறு இடங்களில் வைக்க வேண்டும் எனவும் நீதிபதி ஸ்ரீமதி உத்தரவிட்டுள்ளார். மேலும் மாற்று மதத்தைச் சார்ந்தவர்கள் வழிபட விரும்பினால் பழனி முருகன் கோவில் பதிவேட்டில் பதிவிட வேண்டும் கடவுளின் மீது நம்பிக்கை கொண்டு தரிசனம் செய்ய வருகிறேன் என பதிவேட்டில் உறுதிமொழி எழுத வேண்டும் என அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார் நீதிபதி ஸ்ரீமதி.
English Summary
Maduraihc ordered non hindus not allowed in Palani murugar temple