திடீரென உள்வாங்கிய கடல் - முழுவதுமாக காட்சியளித்த மகிஷாசுரமர்த்தினி குடைவரை கோவில்.! - Seithipunal
Seithipunal


செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மாமல்லபுரத்தில் உலக பாரம்பரிய நினைவு சின்னமாக கடற்கரை கோவில் உள்ளது. இந்தக் கோவில் வரைக்கும் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு கடல் நீர் உட்புகுந்து அரிக்க தொடங்கியதால், தொல்பொருள்துறை இந்த கோவிலின் தென்புறம் முதல் வடபுறம் வரை பாறைகளை குவித்து பாதுகாப்பு அரண் அமைத்து பாதுகாத்து வந்தனர். 

இந்த நிலையில் கடற்கரை கோவிலின் வடக்கு புறப்பகுதியில் அமைந்துள்ள மகிஷாசுரமர்த்தினி குடைவரை கோவில் துர்கா சிற்பத்துடன் கடல் நீரால் சூழப்பட்டு உள்ளது. இந்த கோவிலில் மாசிமாதத்தில் மக்கள் முழங்கால் கடல் நீரில் நடந்து சென்று அங்கு உள்ள துர்கா சிற்பத்திற்கு பூஜை செய்து வணங்குவர். 

தொல்பொருள் துறை கடற்கரை கோவிலுக்கு கற்கள் குவித்து பாதுகாப்பு தடுப்பு அரண் அமைக்கப்பட்டபோது, இந்த மகிஷாசுரமர்த்தினி குடைவரை சிற்பத்தை சேர்த்து பாதுகாப்பு கற்கள் அமைக்காமல் வெளியே அப்படியே விட்டுவிட்டனர். தற்போது இந்த கோவிலை குறிப்பிட்ட சில மாதங்கள் கடல்நீர் சூழ்வதும், குறிப்பிட்ட சில மாதங்கள் கடல் உள்வாங்குவதும் நடைபெறும்.

இந்த நிலையில், தற்போது கடல் உள்வாங்கியதன் மூலம் மகிஷாசுரமர்த்தினி கோவில் முழுமையாக வெளியே தெரிய ஆரம்பித்துள்ளது.
இதனை அப்பகுதி மக்கள் ஆர்வத்துடன் வந்து பார்த்து துர்கா சிற்பத்தை வணங்கிவிட்டுச் செல்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mahishasuramarthini Kudaivari Temple view


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->