மாமல்லபுரம் | திடீர் சோதனையால் கிடைத்த 10 கிலோ பிளாஸ்டிக்! அதிகாரிகளின் அடுத்த கட்ட முடிவு!
Mamallapuram 10 kg of ban plastic seizure
சென்னையில் நடைபெறும் 6 நாட்கள் ஜி20 மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் கலந்துகொள்ள வரும் வெளிநாட்டு பிரதிநிதிகள் இன்று மற்றும் 28-ந்தேதி மாமல்லபுரத்திற்கு வருகை புரிந்து, அவர்கள் அங்குள்ள கடற்கரை கோவில், ஐந்துரதம், வெண்ணை உருண்டைக்கல் உள்ளிட்ட சின்னங்களை சுற்றி பார்க்க உள்ளனர்.
இந்நிலையில் பேரூராட்சிகளின் இணை இயக்குனர் உமாமகேஸ்வரி தெரிவித்திருப்பது, மாமல்லபுரத்தில் இயங்கும் ஓட்டல்கள், வணிக வளாகங்கள், சாலையோர கடைகள், தள்ளு வண்டி கடைகள் உள்ளிட்டவைகளில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்ய கூடாது.
அதனை மீறி யாராவது கடைகளில் விற்பனை செய்தல் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, பேரூராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதனை அடுத்து நேற்று மாமல்லபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் கணேஷ் தலைமையில் பேரூராட்சி சுகாதார பிரிவு ஊழியர்கள் இரண்டு குழுக்களாக பிரிந்து ஓட்டல்கள், வணிக வளாகங்கள், சாலையோர கடைகள், தள்ளுவண்டி கடைகள் போன்ற கடைகளில் தீடீரென சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது பல கடைகளில், தடை செய்யப்பட்ட பாலித்தீன் பைகள், பிளாஸ்டிக் தட்டுகள், டம்ளர்கள் என 10 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்தனர்.
மேலும், பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்திய கடைகளுக்கு அதிகாரிகள், அபராதமாக ரூ.2 ஆயிரத்து 400 விதித்து கடும் நடவடிக்கை மேற்கொண்டனர்.
English Summary
Mamallapuram 10 kg of ban plastic seizure