அழகு நிலையத்தில் விபச்சாரம் - விசாரணையில் சிக்கிய கடை மேலாளர்.! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி அருகே அழகு நிலையத்தில் 'ஸ்பா' என்ற பெயரில் விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட 3 இளம்பெண்கள் மீட்கப்பட்டதுடன் சம்பவம் தொடர்பாக குமரியை சேர்ந்த கடையின் மேலாளரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் கணேஷ்நகர் பகுதியில் பெண்களை வைத்து விபசாரம் நடத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்தத் தகவலின் படி போலீசார் கணேஷ்நகருக்கு சென்று, அங்கு 'ஸ்பா' என்ற பெயரில் இயங்கி வரும் ஒரு அழகு நிலையத்தில் திடீர் சோதனை நடத்தினர். 

அந்த சோதனையில், அழகு நிலையத்தில் மசாஜ் என்ற பெயரில் ஆண்களுக்கு பெண்களை வைத்து விபசாரம் நடத்தியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட புதுச்சேரி, திருப்பூர், வேலூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மூன்று இளம்பெண்களை மீட்டு காப்பகத்துக்கு அனுப்பி வைத்தனர்.

இதைத் தொடர்ந்து போலீசார் அழகு நிலையத்தின் மேலாளரான கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் கொட்டில்பாடு பகுதியைச் சேர்ந்த சேவியர் ஷென்சிசிபு என்பவரை கைது செய்தனர். பின்னர் இந்தச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அழகு நிலைய உரிமையாளர் பால்ராஜ் என்பவரை தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

man arrested for Adultery case


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->