பட்டப்பகலில் வங்கி ஊழியருக்கு அரிவாள் வெட்டு - சென்னையில் பயங்கரம்.!
man arrested for attack bank employee in chennai t nagar
சென்னையில் உள்ள தி.நகர் பர்கிட் சாலை பகுதியில் தனியார் வங்கி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த வாங்கி இன்று வழக்கம்போல் ஊழியர்கள் தங்கள் பணியை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில், வாடிக்கையாளர் போல் வங்கிக்குள் நுழைந்த நபர் ஒருவர், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அங்கிருந்த வங்கி ஊழியரை சராமரியாக வெட்டியுள்ளார்.
இந்தத் தாக்குதலில் வங்கி ஊழியரின் காதில் படுகாயம் ஏற்பட்டது. வங்கி ஊழியரை வெட்டிவிட்டு தப்பி ஓட முயன்றவரை சக ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் மடக்கிப் பிடித்தனர். பின்னர் இந்தச் சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தகவல் அளித்தனர்.
அதன் படி விரைந்து வந்த போலீசார் காயமடைந்த வங்கி ஊழியரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வங்கி ஊழியரை வெட்டிய நபரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
man arrested for attack bank employee in chennai t nagar