ராணிப்பேட்டை || காதலனுடன் பைக்கில் சென்ற மனைவி - நடுரோட்டில் அரிவாளால் வெட்டிய கணவன்.! - Seithipunal
Seithipunal


ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ரஹமத்துல்லா என்பவர் திருவொற்றியூர் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த சனாப் என்பவரை கடந்த 2021-ம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒன்றரை வயதில் குழந்தை உள்ள நிலையில், தம்பதியினருக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஜனாப் கடந்த 8 மாதங்களாக, கணவரை விட்டு பிரிந்து தனது பெற்றோருடன் வசித்து வந்தார்.

இருப்பினும் தம்பதியினர் இருவரும் கடந்த சில மாதங்களாக சந்தித்து பேசி வந்தனர். ஆனால், சனாப் கடந்த 10 நாட்களாக கணவரிடம் பேச மறுத்து வந்ததனால் சந்தேகம் அடைந்த ரஹமத்துல்லா, மனைவிக்கு தெரியாமல் அவரை பின்தொடர்ந்து சென்ற போது சனாப்புக்கு வேறொரு வாலிபருடன் கள்ளக்காதல் இருப்பது தெரிய வந்தது. 

இதுகுறித்து, ரஹ்மத்துல்லா நேற்று மனைவி சனாப்பை சந்தித்து "நான் ஊருக்கு செல்கிறேன். நான் திரும்ப வருவதும், வராததும் உன் கையில் இருக்கிறது" என்று கூறியதற்கு சனாப், "நீ இங்கே வரவேண்டாம். ஊரிலேயே தங்கி விடு" என்று தெரிவித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த ரஹமத்துல்லா, இடுப்பில் மறைத்து வைத்து இருந்த கத்தியை எடுத்து மனைவி சனாப்பை நடுரோட்டில் ஓட ஓட விரட்டி பயங்கரமாக வெட்டியுள்ளார். இதில் சனாப் ரத்த வெள்ளத்தில் சரிந்தார்.து கீழே விழுந்தார்.

இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் சம்பவம் குறித்து அளித்த தகவலின் பேரில் போலீசார் விரைந்து சென்று சனாப்பை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ரஹமத்துல்லாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

man arrested for attack wife in ranipet


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->