தீபாவளி பணம் வாங்கச் சென்ற மகளுக்கு பாலியல் தொல்லை - திருவாரூரில் பயங்கரம்.! - Seithipunal
Seithipunal


திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நன்னிலம் அருகே கட்டிட தொழிலாளிக்கு ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அவருக்கும், அவருடைய மனைவிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மனைவி குழந்தைகளுடன் தனது தாயார் வீட்டில் வசித்து வருகிறார்.

இந்த நிலையில், நாளை மறுநாள் தீபாவளி பண்டிகை வருவதால் பணம் வாங்குவதற்காக மகள் மற்றும் மகன் தந்தையின் வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது அவர் பெற்ற மகள் என்றுகூட பாராமல் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். 

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த சிறுமி சம்பவம் குறித்து தாயாரிடம் தெரிவித்தார். உடனே சிறுமியின் தாய் நன்னிலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்தப் புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

man arrested for harassment in thiruvaru nannilam


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->