திருவாரூர் அருகே அதிர்ச்சி.. நள்ளிரவில் பெண்ணை வீடு புகுந்து கொலை செய்த வாலிபர் கைது.! - Seithipunal
Seithipunal


திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பேரளம் அருகே கீரனூர் அக்கரைதோப்பு தெருவை சேர்ந்தவர் ராமமூர்த்தி மனைவி தேவி. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ராமமூர்த்தி இறந்து விட்டதனால் தேவி, அவரது மகள்கள் மற்றும் ராமமூர்த்தியின் தகப்பனார் உள்ளிட்டோருடன் வசித்து வந்துள்ளார். 

இந்த நிலையில் தேவி அதே பகுதியை சேர்ந்த பக்கிரி ராஜா என்பவருக்கு வீட்டை விற்பதாக கூறி பணம் பெற்றுள்ளார். இதனால் வீட்டை காலி செய்யும்படி பக்கிரி ராஜா தேவியிடம் கேட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல், பக்கிரி ராஜா நேற்று நள்ளிரவு தேவி வீட்டிற்கு சென்று, வீட்டை தனது பெயருக்கு பதிவு செய்து தரும்படி முறையிட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்த வாக்குவாதம் சிறிது நேரத்தில் முற்றியதில் ஆத்திரமடைந்த பக்கிரி ராஜா அருகில் இருந்த உலக்கையை எடுத்து தேவியை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் தேவியின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்து அக்கம் பக்கத்தினர் போலீசில் தகவல் தெரிவித்தனர். அதன் படி, போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தேவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட பக்கிரி ராஜாவை கைது செய்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

man arrested for kill women in thiruvarur


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->