தஞ்சையில் பரபரப்பு - பழங்குடியின பெண்களை செருப்பால் அடித்த திமுக நிர்வாகியின் கணவர்.! - Seithipunal
Seithipunal


தஞ்சையில் பரபரப்பு - பழங்குடியின பெண்களை செருப்பால் அடித்த திமுக நிர்வாகியின் கணவர்.!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பட்டுக்கோட்டை நகர் பகுதியில் பழங்குடியினர் பிரிவைச் சேர்ந்த பல குடும்பங்கள் வாழ்வாதாரம் இல்லாமல் அங்கங்கே கிடைக்கும் இடங்களின் படுத்துக்கொண்டு, கிடைக்கும் தொழிலை செய்துகொண்டு நாட்களை கழித்து வருகின்றனர். 

பெண்கள் தம் குழந்தைகளுடன் ஒவ்வொரு பகுதியாக சென்று சாலையோரம் கிடக்கும் பழைய பாட்டில்கள், பேப்பர் மற்றும் இரும்பு பொருட்களை சேகரித்து அவற்றை கடையில் விற்று அதில் கிடைக்கும் வருவாய்களை வைத்து குடும்பத்தை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சில பழங்குடியின பெண்கள் பட்டுக்கோட்டை அருகே உள்ள குறிச்சி பகுதியில், சாலையோரம் கிடந்த பாட்டில்களை சேகரித்துக் கொண்டிருந்தனர். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த பேராவூரணி வடக்கு திமுக ஒன்றிய மகளிர் அணி அமைப்பாளர் தீபலட்சுமியின் கணவர் சாமிநாதன் என்பவர், அந்தப் பெண்களை தரக்குறைவாக பேசி செருப்பால் அடித்துள்ளார்.

இதனை பொதுமக்கள் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். தற்போது, வைரலாகி வரும் இந்த வீடியோவிற்கு பலரும் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் சுவாமிநாதனை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரான தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், சாலையில் பாட்டிலகை சேகரித்து கொண்டிருந்த பழங்குடியின பெண்களை தாக்கிய நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

man attack tribal woman with shoe in tanjore vedio viral


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->