திருப்பூர் || சைக்கிள் மீது மோதிய இருசக்கர வாகனம்... வாட்டர்மேன் பரிதாப பலி..!
Man Death in Accident
சைக்கிளில் சென்றவர் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம் மாதம்பூரௌ சேர்ந்தவர் சுப்பிரமணி. இவர் அந்த பகுதியில் குடிநீர் விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில், தாராபுரம் சாலை வழியாக தனது சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது பல்லடம் சாலையில் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனம் அவர் மீது மோதியது. இந்த விபத்தில் சுப்ரமணியன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினரும் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள வெளியாகியுள்ளன.