அடுத்த அதிர்ச்சி - விழுப்புரத்தில் கள்ளச்சாராயம் குடித்து ஒருவர் உயிரிழப்பு.!
man died drink kallasarayam in vilupuram
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திருவெண்ணெய்நல்லூர் அருகே டி.குமாரமங்கலம் கிராமத்தில் கடந்த 5 நாட்களுக்கு முன்பு கள்ளச் சாராயம் விற்கப்பட்டுள்ளது. இதை குடித்த ஜெயராமன் மற்றும் 2 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டு, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி ஜெயராமன் நேற்று அதிகாலை உயிரிழந்தார். அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்கு பிறகு, குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. மற்ற 2 பேருக்கும் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்தச் சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். அதன் படி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சம்பந்தப்பட்ட இடத்தில் கள்ளச் சாராயம் விற்கப்படும் காட்சிகளை ஊடகங்கள் வெளியிட்டு சுட்டிக்காட்டிய பிறகும் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததால் இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. அரசுக்கு நிர்வாகத் திறன் இல்லாததே இதற்கு காரணம் என்று தெரிவித்துள்ளார்.
இதேபோல், பாமக தலைவர் அன்புமணி, கள்ளச் சாராயத்தை கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்காத திமுக அரசு பதவி விலக வேண்டும். சிபிஐ விசாரணைக்கு அரசு உத்தரவிட வேண்டும்" என்றுத் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
English Summary
man died drink kallasarayam in vilupuram