மனைவி குழந்தையின் மீது தீ வைத்து எரித்த நபர் - ஈரோட்டில் சோகம்.!
man fire to wife and child in erode
ஈரோடு மாவட்டத்தில் உள்ள, மாணிக்கம்பாளையம் பகுதியைச் சேர்ந்த திருமலைச்செல்வன் - சுகன்யா என்ற தம்பதியினர்களுக்கு ஏழு வயதில் ஒமிஷா என்ற பெண் குழந்தையும், நான்கு வயதில் நிகில் என்ற ஆண் குழந்தையும் இருந்தனர்.
இதற்கிடையே திருமலைச்செல்வன் அடிக்கடி மது அருந்திவிட்டு மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சுகன்யா தனது இரண்டு குழந்தைகளுடன் தனது தாயின் வீட்டிற்கு கோபத்துடன் சென்று அங்குள்ள சாயப்பட்டறைக்கு வேலைக்குச் சென்று கொண்டிருந்தார்.
இந்த நிலையில் சுகன்யாவையும், குழந்தைகளையும் பார்ப்பதற்காக திருமலைச் செல்வன் சென்றுள்ளார். அப்போது கணவன் மனைவி இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதில் ஆத்திரமடைந்த திருமலைச்செல்வன், தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் மீது ஊற்றி நெருப்பு வைத்துள்ளார்.
இதனால், அவர்கள் கத்திக் கூச்சலிட்டதைக் கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைத்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில், சுகன்யாவின் மகன் நிகில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
man fire to wife and child in erode