கும்பகோணம் - சூப்பர் மார்க்கெட்டில் நூதன முறையில் மோசடி செய்த நபர் - போலீசார் விசாரணை.!
man fraud super market in kumbakonam
கும்பகோணம் - சூப்பர் மார்க்கெட்டில் நூதன முறையில் மோசடி செய்த நபர் - போலீசார் விசாரணை.!
கும்பகோணம் மோதிலால் தெருவில் மளிகை பொருட்கள் விற்பனை செய்யப்படும் தனியார் சூப்பர் மார்க்கெட் அங்காடி உள்ளது. இங்கு வீட்டுக்கு தேவையான மளிகை பொருட்களை போன் மூலம் வாடிக்கையாளர்கள் ஆர்டர் செய்து, அதனை சேல்ஸ் மேன் மூலம் வீட்டுக்கு அனுப்பி வைப்பது வழக்கம்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இந்த சூப்பர் மார்க்கெட் மேலாளருக்கு போன் மூலம் எங்களுக்கு 7 மூட்டை அரிசி தேவைப்படுகிறது என்று அதற்கான முகவரியையும் தெரிவித்துள்ளார். அதன் படி மேலாளர் இரண்டு சேல்ஸ்மேன்கள் மூலம் அரிசியை வாடிக்கையாளர் தெரிவித்த முகவரிக்குச் அனுப்பி வைத்தார்.
அங்கு அந்த நபர் ஆறு மூட்டை அரிசியை இங்கே இறக்கி விடுங்கள் மேலும் ஒரு மூட்டையை ஜான் செல்வராஜ் நகரில் உள்ள எனது நண்பர் வீட்டில் இறக்கி விட்டு வாருங்கள், பணம் செலுத்தி விடுகிறேன் என்று கூறியுள்ளார். இதையடுத்து சேல்ஸ்மேன்கள் அந்த ஒரு அரிசி மூட்டையை இறக்கி வைப்பதற்காக சென்றனர். ஆனால், அந்த வீட்டில் அப்படி யாரும் இல்லை.
இதனால் அதிர்ச்சியடைந்த சேல்ஸ்மேன்கள் உடனடியாக அரிசி மூட்டையை இறக்கி வைத்த இடத்தை நோக்கி சென்றனர். அப்போது இறக்கி வைத்த அரிசி மூட்டையையும், அந்த ஆசாமியையும் காணவில்லை. இது அவர்களுக்கு மீறலும் அதிர்ச்சியைத் தந்துள்ளது.
இதைத்தொடர்ந்து சேல்ஸ்மேன்கள் சம்பவம் குறித்து, சூப்பர் மார்க்கெட் உரிமையாளருக்குத் தகவல் தெரிவித்தனர். இதைக்கேட்ட அவர் உடனே போலீசில் புகார் அளித்தார். அதன் படி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
man fraud super market in kumbakonam