மதுரை || எட்டி உதைத்த போக்குவரத்து போலீசார் - கோமா நிலைக்குச் சென்ற வாலிபர்.! - Seithipunal
Seithipunal


மதுரை மாவட்டம் ஆண்டாள்பும் பகுதியைச் சேர்ந்தவர் அழகு விநாயகர் செல்வம். இவர் பைக்காராவிலிருந்து ஆண்டாள்புரத்துக்கு இருசக்கரவாகனத்தில் இருந்து வந்துக் கொண்டிருந்தபோது, பழங்காநத்தம் ரவுண்டானாவில்  நின்றுகொண்டிருந்த போக்குவரத்து போலீசார் ஒருவர் கையை நீட்டி தடுத்துள்ளார். 

ஆனால், விநாயகர் செல்வம் இதனை கவனிக்காமல் அந்த இடத்தை கடந்து சென்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த போலீஸ்காரர் இருசக்கர வாகனத்தைத் துரத்திச்சென்று, விநாயகர் செல்வத்தை நிறுத்தும் விதமாக வேகமாக உதைத்துள்ளார். 

இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த செல்வ விநாயகம் காயமடைந்து மயங்கிக் கிடந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் செல்வா விநாயகத்தை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரின் உடல் நிலை மோசமாக  இருந்ததால், அங்கிருந்து அவர் ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு அவருக்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் விநாயகர் செல்வம் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சுயநினைவின்றி இருப்பது தெரிய வந்தது. போக்குவரத்து போலீசார் செய்த இந்தச் சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

man go to koma stage due to traffic police hit in madurai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->