அதிக லாபம் கிடைக்கும் என்று ஆன்லைன் செயலியில் பணத்தை இழந்த வாலிபர்.!
man lossed fifteen lakhs money to online app in coimbatore
அதிக லாபம் கிடைக்கும் என்று ஆன்லைன் செயலியில் பணத்தை இழந்த வாலிபர்.!
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம் அடுத்த சிக்கதாசம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஞானமணி. ஐ.டி. ஊழியரான இவர் கொரோனா காலகட்டத்தில் ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்ற அறிவிப்பை நம்பி ஒரு செயலி மூலம் பணத்தை முதலீடு செய்துள்ளார்.
மொத்தமாக அவர் அந்த செயலி மூலம் 15 லட்சத்து 73 ஆயிரத்து 395 ரூபாய் முதலீடு செய்துள்ளார். இந்த நிலையில் அந்த செயலியில் இருந்து அவரது முதலீட்டிற்கு இதுவரை 61 லட்சத்து 5 ஆயிரம் லாபம் கிடைத்து உள்ளதாக தகவல் வந்துள்ளது.
இதைப்பார்த்த ஞானமணி லாப பணத்தை தனது வங்கிக் கணக்கிற்கு மாற்ற பல்வேறு வகைகளில் முயற்சி செய்துள்ளார். ஆனால், அவரால் அந்த லாப பணத்தை மாற்ற முடியவில்லை. இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர்சம்பவம் தொடர்பாக கோவை மாவட்ட சைபர் க்ரைம் போலீசில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின் படி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் அந்த செயலி போலி என்பதும், அவரது பணம் மோசடி செய்யப்பட்டதும் தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து போலீஸார் சம்பந்தப்பட்ட வங்கிக் கணக்கை முடக்கி அதில் இருந்த 15.73 லட்சம் பணத்தை மீட்டு நேற்று ஞானமணியிடம் ஒப்படைத்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளளது.
இதுகுறித்து சைபர் க்ரைம் போலீஸார் கூறுகையில், "ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபடும் முன் அது குறித்த செயலிகளின் உண்மைத் தன்மையை உறுதி செய்து கொள்ள வேண்டும். ஆன்லைன் மூலம் பண மோசடி நடைபெற்றால் உடனடியாக 1930 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் அளிக்க வேண்டும்.
மேலும் www.cybercrime.gov.in என்ற இணையதளம் மூலமாகவும் தங்களது புகார்களை பதிவு செய்யலாம். இதன் மூலம் போலீஸார் விரைந்து நடவடிக்கை எடுத்து இழந்த பணத்தை மீட்க முடியும்" என்று கூறினர்.
English Summary
man lossed fifteen lakhs money to online app in coimbatore