திருநெல்வேலி || பேருந்து நிலையத்தில் தலை தெறிக்க ஓடிய பயணிகள் - ஆசாமி வெறிச்செயல்.! - Seithipunal
Seithipunal


திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து நாள்தோறும் தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி, விருதுநகர், மதுரை, சென்னை உள்ளிட்ட வெளி மாவட்டங்கள் மற்றும் பெங்களூரு, புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட பகுதிகளுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 

இந்த நிலையில், திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் ஆசாமி ஒருவர் நேற்று மாலை பயணிகள் முன்னிலையில் ஆடைகளைக் களைந்து தகாத செயலில் ஈடுபட்டுள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பயணிகளில் சிலர் அந்த நபரின் செயலை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.

இதையடுத்து இந்த வீடியோ வைரலான நிலையில் திருநெல்வேலி காவல் துறையின் கவனத்துக்கும் சென்றது. உடனே இந்த சம்பவம் தொடர்பாக மேலப்பாளையம் உதவி ஆணையர் சதீஷ்குமார் உத்தரவு பிறப்பித்தார்.

அந்த உத்தரவின் படி திருநெல்வேலி பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள கடைகளின் சிசிடிவி கேமராக்களை போலீஸார் ஆய்வு செய்ததில் தகாத செயலில் ஈடுபட்டவர், திருநெல்வேலி மாவட்டம், தாழையூத்து அருகே உள்ள பாப்பையாபுரம் பகுதியைச் சேர்ந்த யேசுபாலன் என்பது தெரியவந்தது. 

இதைத் தொடர்ந்து போலீசார் யேசுபாலனை இன்று கைது செய்து சிறையில் அடைத்தனர். பேருந்து நிலையத்தில் ஆசாமி ஒருவர் தகாத செயலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

man masturbated in tirunelveli new bus stand


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->