தேனி || பட்டப்பகலில் நடந்த கொடூரம் - நீதிமன்ற வாசலில் வாலிபர் வெட்டிக் கொலை.!
man murder in court gate at theni
தேனி மாவட்டத்தில் உள்ள உத்தமபாளையம் அருகே அனுமந்தன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பிரசாத். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த அனீஸ் ரகுமான் என்பவரின் மனைவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் பிரசாத்துடன் ரகுமானின் மனைவி சென்றதால் அப்போது முதல் பிரசாத் மீது அனீஸ் ரகுமானுக்கு கோபம் அதிகரித்ததுடன் அவரை தீர்த்து கட்டுவதற்காக சமயம் பார்த்துக் கொண்டு இருந்தார்.
இந்த நிலையில், இன்று காலை பிரசாத் முனீஸ்வரன் கோவில் அருகே உள்ள ஒரு ஓட்டலில் இருந்து வெளியே வந்தார். அவரை பார்த்ததும் அனீஸ் ரகுமான் தான் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களால் தாக்க முயன்றார். உடனே சுதாரித்துக் கொண்ட பிரசாத் அவரிடமிருந்து தப்பிக்க ஓடியுள்ளார்.
அதன் படி அவர் உத்தமபாளையம் ஒருங்கிணைந்த நீதிமன்றம் அருகே ஓடிய போது ரகுமான் பிரசாத்தை கீழே தள்ளி தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்தியும், கழுத்தை அறுத்தும் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பித்து ஓடியுள்ளார்.
இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் படி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பிரசாத் உடலை கைப்பற்றி தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் போலீசார் தப்பி ஓடிய அனீஸ் ரகுமானை தேடி வருகின்றனர். பட்ட பகலில் நீதிமன்றம் வளாகம் அருகே வாலிபர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
English Summary
man murder in court gate at theni