மனைவி கண்முன் கணவன் வெட்டிக் கொலை - ஈரோட்டில் பயங்கரம்..!
man murder in erode
சேலம் மாவட்டத்தில் உள்ள கிச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி ஜான் என்கிற சாணக்யா என்பவர் மீது இரண்டு கொலை உள்பட 14 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில், ரவுடி ஜான் இன்று காலை தனது மனைவியுடன் திருப்பூரில் உள்ள மாமனார் வீட்டிற்கு காரில் சென்றுள்ளார்.
அப்போது, சேலத்தில் இருந்து ஜானை ஐந்து பேர் கொண்ட கும்பல் காரில் பின்தொடர்ந்து சென்றுள்ளது. இந்தக் கும்பல் ஈரோடு மாவட்டம் பவானி அருகே ஜானின் கார் மீது தங்கள் காரை மோதி விபத்தை ஏற்படுத்தியது. ஆனால், காரை ஜானின் மனைவி ஓட்டிய நிலையில் விபத்தில் நிலைகுலைந்த அவர் காரை சூதகமாக நிறுத்தியுள்ளார்.

உடனே விபத்தை ஏற்படுத்திய காரில் இருந்து இறங்கிய 5 பேர் கொண்ட கும்பல், காரின் முன் இருக்கையில் அமர்ந்திருந்த பிரபல ரவுடி ஜானை தாங்கள் வைத்திருந்த ஆயுதங்களால் கொடூரமாக வெட்டிவிட்டுத் தப்பித்துச் சென்றனர். இந்த கொடூர தாக்குதலில் ரவுடி ஜான் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த கொடூர சம்பவம் ஜானின் மனைவி சரண்யா முன்பு நிகழ்ந்துள்ளது. இதனால், அவர் கதறி அழுதுள்ளார். இந்தச் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் சம்பவம் குறித்து அளித்த தகவலின் படி போலீசார் விரைந்து வந்து, ரவுடியை கொலை செய்துவிட்டு காரில் தப்பியோடிய ஐந்து பேரை தீவிரமாக தேடி வந்தது.
போலீசார் நடத்திய அதிரடி தேடுதல் வேட்டையில் நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். இதில் ஒருவர், போலீஸ் என்கவுன்டர் மூலம் துப்பாக்கியால் சுட்டு பிடிக்கப்பட்டார். தலைமறைவாக உள்ள மீதியுள்ள ஒருவரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.