சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபருக்கு 20 வருடங்கள் கடுங்காவல் தண்டனை..நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!
Man sentenced to 20 years in prison for sexually abusing minor girl Court verdict
பாலியல் குற்றம் புரிந்த குற்றவாளிகளுக்கு 20 வருடங்கள் கடுங்காவல் தண்டனைமற்றும் ரூ.12,000/- அபராதம் விதித்து ராணிப்பேட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.
கடந்த 28.11.2018-ம் தேதி இராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அனைத்துமகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அரக்கோணம் தாலுக்கா, பெருமூச்சி கிராமத்தில் ஒருசிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த மோகன்ராஜ் என்பவர் மீது பாலியல் குற்றம் (POCSO) சட்டத்தின் கீழ் அரக்கோணம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.
இவ்வழக்கு இராணிப்பேட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை துரிதமாக நடைபெற்றது.இராணிப்பேட்டை முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி செல்வம், அவர்களால் இவ்வழக்கில் குற்றவாளி மோகன்ராஜ் என்பவருக்கு20 வருடம் கடுங்காவல் தண்டனை மற்றும் ரூ.12,000/- அபராதம் என தீர்ப்பு வழங்கப்பட்டது.
மேலும் இவ்வழக்கில் நீதிமன்றத்தில் சிறப்பாக வழக்கு நடத்தி தண்டனை பெற்றுத் தந்தகூடுதல் அரசு வழக்கறிஞர் சங்கர் மற்றும் வழக்கின் புலனாய்வு அதிகாரியான காவல்ஆய்வாளர் வசந்தி (அப்போதைய அரக்கோணம் அனைத்து மகளிர் காவல் நிலையஆய்வாளர்), வாசுகி (தற்போதைய அரக்கோணம் அனைத்து மகளிர் காவல் நிலையஆய்வாளர்), மற்றும் நீதிமன்ற காவலர் WHC-308 மாலதி ஆகியோரை இராணிப்பேட்டைமாவட்ட காவல் கண்காணிப்பாளர் விவேகானந்த சுக்லா, வெகுவாக பாராட்டினார்.
English Summary
Man sentenced to 20 years in prison for sexually abusing minor girl Court verdict