இன்று நள்ளிரவு முதல் தமிழகத்தில் 40 சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணம் உயர்வு..!
Toll fees will increase at 40 toll booths in Tamil Nadu from midnight today
சுங்கக்கட்டணம் வரி அதிகரிப்பு தொடர்பில் 1992-ஆம் ஆண்டு தேசிய நெடுஞ்சாலைகளுக்கு ஏப்ரல் மாதமும், 2008-ஆம் ஆண்டு சாலைகளுக்கு செப்டம்பர் மாதமும் கட்டணம் உயர்த்தப்படுவது குறித்த தீர்மானம் உள்ளது.
தமிழகத்தில் 78 சுங்கச்சாவடிகளில் சுங்கக்கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஏப்ரல் 01-ஆம் தேதி முதல் சுங்கச்சாவடிகளில் 05 முதல் 10 சதவீதம் வரை கட்டணத்தை உயர்த்தி வசூலிக்குமாறு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சுற்றறிக்கை அனுப்பியிருந்தது.

அதன்படி தமிழகத்தில் உள்ள 78 சுங்கச்சாவடிகளில் முதற்கட்டமாக இன்று நள்ளிரவு முதல் 40 சுங்கச்சாவடிகளுக்கு கட்டணம் உயர்த்தப்படுகிறது. அதில், சென்னையில் பரனூர்,வானகரம்,சூரப்பட்டு ஆகிய 03 இடங்களில் உயர்த்தப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
அத்துடன், வாகனங்களின் வகைகளின்படி 06 வகையான கட்டணங்கள் நிர்ணயித்து வசூலிக்கப்படவுள்ளது.
English Summary
Toll fees will increase at 40 toll booths in Tamil Nadu from midnight today