டெலிவரி தொழிலாளர்களுக்காக மாஸ் திட்டம்; சாலையோரங்களில் ஏசி ஓய்வறை; சென்னை மாநகராட்சி..!
AC rest rooms on the roadside for delivery workers
சென்னை போன்ற பெரு நகரங்களில் ஸ்விக்கி, ஸ்மோட்டோ போன்ற உணவு டெலிவரி சேவை செய்யும் நிறுவனங்கள் 24 மணி நேர உணவு டெலிவரி ஊழியர்கள் சேவையை வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில், உணவு டெலிவரி மற்றும் இ - காமர்ஸ் நிறுவனங்களில் டெலிவரி செய்யும் தொழிலாளர்களுக்காக சென்னை நகரின் முக்கிய சாலைகளில் ஏசி வசதியுடன் கூடிய ஓய்வு அறைகள் அமைக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

இன்றைய காலகட்டத்தில் உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதே வேளையில், இந்த நிறுவனங்களின் ஊழியர்கள் சரியாக நடத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்து வருகின்றன. பெரும்பாலும் போக்குவரத்து நெரிசல், வெயில், மழை என்று பல்வேறு சூழ்நிலையிலும் அவர்கள் வேலை செய்கிறார்கள்.
அதன்படி சென்னை அண்ணாநகர், நுங்கம்பாக்கம், ராயப்பேட்டை, மயிலாப்பூர், தி.நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஏசி ஓய்வறை அமைக்க திட்டமிட்டுள்ளது. கழிவறை, குடிநீர், ஸ்மார்ட்போன் சார்ஜிங் வசதி உள்ளிட்டவை அடங்கிய அறை மூலம் பெண் தொழிலாளர்கள் அதிக பயனடைவர்.
English Summary
AC rest rooms on the roadside for delivery workers