திருப்பத்தூரில் சோகம் - கல்லூரி மாணவியை கழுத்தறுத்து கொன்ற தாய்மாமன் தற்கொலை.! - Seithipunal
Seithipunal


திருப்பத்தூரில் சோகம் - கல்லூரி மாணவியை கழுத்தறுத்து கொன்ற தாய்மாமன் தற்கொலை.!

திருப்பத்தூர் மாவட்டத்தில் நாட்றம்பள்ளி அருகே பனந்தோப்பு பகுதியைச் சேர்ந்த பெருமாள் மகள் ஜீவிதாவும் அவருடைய தாய் மாமன் சரண்ராஜும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். 

இதற்கிடையே ஜீவிதாவின் தாய் சரண்ராஜ் கொலை வழக்கு ஒன்றில் தொடர்புடையவர் என்று தெரியவந்ததால் திருமணம் செய்து கொடுக்க மறுத்துள்ளார். இதனால், சரண்ராஜ் கடந்த ஒரு வாரமாக ஜீவிதாவை பின் தொடர்ந்து சென்று பேச முயன்றுள்ளார்.

அப்போது, ஜீவிதா பேச மறுத்ததால், ஆத்திரமடைந்த சரண்ராஜ் யாரும் இல்லாத நேரம் பார்த்து ஜீவிதாவின் வீட்டிற்கு வந்து அங்கு தனியாக இருந்த ஜீவிதாவின் வாயில் துணியை வைத்து அடைத்து, கத்தியால் கழுத்தை அறுத்து படுகொலை செய்தார். 

அதன் பின்னர், தானும் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக கடிதம் ஒன்றை எழுதி வைத்து விட்டு அங்கிருந்தது தப்பித்துச் சென்றார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த வந்த போலீசார் ஜீவிதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதைத்தொடர்ந்து, போலீசார் சம்பவம் தொடர்பாக கொலை வழக்குப் பதிவு செய்து சரண்ராஜை கைது செய்தனர். அப்போது அவர் தான் விஷம் குடித்துவிட்டதாக கூறியதால் அதிர்ச்சியடைந்த போலீசார் உடனடியாக அவரை நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சைக்காக அனுமதித்தனர். 

அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைற்கு கொண்டுச் சென்றனர். ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து போலீசார் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த நேரத்தில் சரண்ராஜ் தற்கொலைக்கு முன்பாக வெளியிட்ட வீடியோ ஒன்று கிடைத்துள்ளது. அதில் அவர், "வாழும் போது தான் ஒன்றாக வாழ முடியவில்லை. செத்த பிறகாவது ஒன்றாக இருக்க வேண்டும். அதனால், இறந்த அக்கா மகளின் உடலுடன் தன உடலை சேர்த்து புதைக்க வேண்டுமென கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

man sucide after murder girl friend in tirupathur


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->