யானையை கொன்ற வழக்கில் தப்பிய வாலிபர் காட்டில் பிணமாக மீட்பு! - Seithipunal
Seithipunal


யானையை கொன்ற வழக்கில் தப்பிய செந்தில் அழுகிய நிலையில் தமிழக கர்நாடகா எல்லை கொங்கரப்பட்டி வனப்பகுதியில் காவல் துறையினரால் பிணமாக மீட்கப்பட்டு இருக்கிறது.

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள ஏமனூர் வனப்பகுதியில் மார்ச் 1 அன்று ஆண் யானையை கொன்று எரித்து தந்தங்கள் வெட்டி எடுக்கப்பட்டது .இந்த சம்பவம் தொடர்பாக கொங்கரபடியைச் சேர்ந்த விஜயகுமார் 23 கோவிந்தராஜ் 54 செங்கப்பாடியைச் சேர்ந்த தினேஷ் 26 ஆகிய மூன்று பேரை வனத்துறையினர் கைது செய்து விசாரணை செய்ததில் மேற்படி நபர்களிடமிருந்து யானையின் தந்தம் துப்பாக்கி உட்பட ஆயுதங்கள் பறிமுதல் செய்ததாகவும் 3 பேர் தலைமறைவாக இருப்பதாகவும் வனத்துறையினர் தெரிவித்தனர். 

இந்த நிலையில் கொங்கரப்பட்டியைச் சேர்ந்த செந்தில் 30 என்பவரை கைது செய்து அவருக்கு கையில் விலங்கு அணிவித்து ஏமனூர் வனப்பகுதியில் யானையை கொன்ற இடத்திற்கு விசாரணைக்காக வனத்துறையினர் அழைத்து சென்றனர் .

அப்போது செந்தில் வன துறையினரிடம் இருந்து தப்பித்து சென்றதாக சொல்லப்பட்டது. இது குறித்து தருமபுரி மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம் கூறுகையில் ,ஏமனூரில் யானையைக் கொன்று தந்தம் கடத்திய வழக்கில் கைதான செந்திலை வனப்பகுதிக்கு அழைத்துச் சென்று அவர் பதுக்கிய ஆயுதங்களை மீட்டுக் கொண்டிருந்தோம், அப்போது கை விலங்குடன் இருந்த செந்தில் வனத்துறை அலுவலர்களை தாக்கி விட்டு செந்தில் தப்பினார் ,செந்தில் உட்பட இந்த வழக்கில் தொடர்புடைய தந்தத்தை விலை பேசிய மூன்று நபர்களை தேடி வருகிறோம், தப்பிய செந்தில் குறித்து ஏரியூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது என்றார்.

 கடந்த மார்ச் மாதம் 20 3 2025 ஆம் தேதி வனத்துறையினரால் கைது செய்து அழைத்துச் செல்லப்பட்ட செந்திலின் மனைவி சித்ரா அவர்கள் மாநில மனித உரிமை ஆணையர் மற்றும் தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியவர்களிடம்  கூறியுள்ளதாவது வனத்துறையினரால் கைது செய்து அழைத்துச் செல்லப்பட்ட எனது கணவரை பற்றி எந்த தகவலும் எனக்கு கிடைக்கவில்லை எனது கணவர் செந்தில் அவர்களின் உயிருக்கு பாதுகாப்பு இல்லை வனத்துறையினர் செந்தில் அவர்களை பற்றி எந்த தகவலும் கொடுக்காமல் முன்னுக்கு பின் முரணாக பேசுகிறார்கள் எனது கணவர் செந்தில் அவர்களின் உயிருக்கு ஆபத்து நேரிட்டால் அதற்கு தர்மபுரி மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம் மற்றும் அவரது வன காவலர்கள் மட்டுமே முழு பொறுப்பாவார்கள் என்று மனு அளித்துள்ளார் சித்ரா அவர்கள்.

 இந்த நிலையில் யானை கொல்லப்பட்ட விவகாரத்தில் தப்பி உள்ளதாக சொல்லப்படும் செந்தில் என்பவரின் உடல் துப்பாக்கியால் சுடப்பட்டு அழுகிய நிலையில் தமிழக கர்நாடகா எல்லை கொங்கரப்பட்டி வனப்பகுதியில் காவல் துறையினரால் மீட்கப்பட்டு தர்மபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனை செய்வதற்கு எடுத்துச் சென்று விட்டார்கள், வனத்துறையினடமிருந்து தப்பிச்சென்ற செந்திலை வனத்துறையினரே சுட்டுக்கொன்று விட்டு நாடகம் ஆடுவதாக அந்தப் பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Man who escaped from elephant killing found dead in forest


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->