கொன்று விடுவேன்! பள்ளிக்குள் மாணவர்களை துப்பாக்கி காட்டி மிரட்டிய போலீஸ்?!
Manamadurai School Student police attack
சிவகங்கை அருகே பள்ளி வளாகத்தில் சத்தம் போட்டு, அராஜகம் செய்த மாணவர்களை கண்டிக்க, ஆசிரியர்கள் போலீசாரை வரவழைத்து மிரட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை பகுதியில் தமிழக அரசின் உதவிபெறும் மேல்நிலைப் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது.
இந்தப் பள்ளிகள் படிக்கும் மாணவர்கள் அடிக்கடி சத்தம் போட்டு கூச்சலிட்டு, பாட்டு பாடி அராஜகத்தில் ஈடுபடுவதாக அவ்வப்போது புகார்கள் வருவதாக சொல்லப்படுகிறது. மேலும் மாணவர்களுக்கிடையே மோதல் ஏற்படுவதாகவும் சொல்லப்படுகிறது.
இந்த நிலையில், சம்பவம் நடந்த அன்று பள்ளி வளாகத்தில் பதினொன்றாம் வகுப்பை சேர்ந்த 6 மாணவர்கள் சத்தம் போட்டு கூச்சல் இட்டு அராஜகத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது.
இதனை அடுத்து அந்த மாணவர்களை கண்டிக்க நினைத்த பள்ளியின் ஆசிரியர், மாணவர்களை பள்ளியின் தனி அறை ஒன்றுக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அங்கு மாணவர்களை ஆசிரியர்கள் பூட்டியதாகவும், அந்த அறைக்குள் காவல் உதவி ஆய்வாளர் மற்றும் போலீசார் லத்தியால் தாக்கியதாகவும் மாணவர்கள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மேலும் போலீசார் துப்பாக்கிய எடுத்துக்காட்டி, கொன்று விடுவேன் என்று மிரட்டியதாகவும் மாணவர்கள் தரப்பில் குற்றம் சாட்டியுள்ளனர்.
மாணவர்களின் இந்த குற்றச்சாட்டு குறித்து அரசு உதவி பெறும் பள்ளியில் தற்போது போலீசார் மற்றும் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிய வருகிறது.
English Summary
Manamadurai School Student police attack