மணப்பாறை: 4-ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை - பள்ளி தாளாளர் உள்பட 4 பேர் கைது!
Manaparai School girl Harassment case
மணப்பாறை அருகே தனியார் பள்ளியில் 4-ஆம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வழக்கில் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
மணப்பாறைப்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில், அந்த பள்ளியின் தாளாளரின் கணவர் வசந்தகுமார் மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது.
இதையறிந்த மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் வசந்தகுமாரை தாக்கி, காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். தொடர்ந்து, குழுவாக பள்ளிக்குள் நுழைந்தவர்கள் அலுவலகம், வகுப்பறை கண்ணாடிகளை உடைத்து, அங்கு நிறுத்தப்பட்டிருந்த 2 கார்கள் சேதப்படுத்தினர்.
மேலும், சிலர் சாலை மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்தில் பதற்றத்தை கட்டுப்படுத்த, போராட்டக்காரர்களை காவல்துறையினர் அப்புறப்படுத்தினர்.
இதற்கிடையே, பள்ளி தாளாளர், அவரது கணவர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். தலைமறைவாக உள்ள பள்ளி முதல்வரை தேடி வருவதாக காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரெத்தினம் தெரிவித்தார்.
மாணவியின் உறவினர்கள், சம்பந்தப்பட்ட தனியார் பள்ளியை மூட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
English Summary
Manaparai School girl Harassment case