மாண்டாஸ் புயல்.. அரசு பேருந்து மீது மரம் சாய்ந்து விழுந்து விபத்து.. பயணி ஒருவர் காயம்.!
Mandas storm Tree falls on government bus One passenger injured
வங்க கடலில் கடந்த 5-ந் தேதி ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, நேற்று முன்தினம் புயலாக வலுவடைந்தது.
இதனால், தமிழகம் மற்றும் வட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் சூறாவளி காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது. இதையடுத்து, மாண்டஸ் புயல் நேற்று இரவு 3 மணியளவில் சென்னை மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது. அந்த நேரத்தில் மணிக்கு 70 முதல் 80 கி.மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியது.
புயல் காரணமாக சென்னை மற்றும் வேலூர் உள்ளிட்ட பெரும்பான்மையான பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளது. அதன் காரணமாக பல்வேறு இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வேலூரில் அரசு பேருந்து மீது மரம் சாய்ந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பயணி ஒருவர் காயம்மடைந்தார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வருவாய் மற்றும் காவல் துறையினர் மரத்தினை அகற்றி, காயமடைந்தவரை மருத்துவமனையில் அனுமதித்தனர்.
English Summary
Mandas storm Tree falls on government bus One passenger injured