விழுப்புரத்தில் தொடரும் மரண ஓலம்.. கள்ளச்சாராயம் பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு..!! - Seithipunal
Seithipunal


விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே வம்பாமேடு பகுதியை சேர்ந்த அமரன் என்பவர் விற்ற கள்ளச்சாராயத்தை குடித்ததால் தற்பொழுது வரை 9 பேர் உயிரிழந்த நிலையில் பலர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தையே உலுக்கிய இந்த சம்பவத்தில் கள்ளச்சாராயம் அருந்திய சுமார் 60க்கும் மேற்பட்டோர் விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் மருத்துவமனையிலும், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் கள்ள சாராயம் குடித்த 10 பேர் உயிரிழந்த நிலையில் மருத்துவமனைகளில் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விஜயன் என்பவர் தற்பொழுது உயிரிழந்து உள்ளார். இதன் மூலம் விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் மட்டும் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. 

அதே போன்று செங்கல்பட்டு மாவட்டத்தில் போலி மதுபானம் குடித்து 5 பேர் உயிரிழந்துள்ளனர். கள்ளச்சாராயம் குடித்து விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் தற்போது வரை மொத்தம் 16 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Marakanam fake liquor death toll has risen to 11


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->