சாலைகளில் யானை குட்டிகளின் விளையாட்டு! வலைத்தளங்களில் வைரலாகும் காட்சிகள்! - Seithipunal
Seithipunal


கோவையில் ஆனைகட்டி, தடாகம், மாங்கரை, பெரியநாயக்கன் பாளையம், மருதமலை ஆகிய பகுதிகளில் யானைகள் கூட்டம் கூட்டமாக, கடந்த சில நாட்களாக நடமாடி வருகின்றன.

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஐ.ஓ.பி. காலனியை சேர்ந்த குமார் என்பவர் யானை தாக்கி உயிரிழந்தார்.  இதனால், மருதமலைக்கு இருசக்கர வாகனத்தில் செல்லும் நபர்களுக்கு காலை 7 மணி முதல் 5 மணி வரை மட்டும் தான் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், பக்தர்கள் மருதமலைக்கு மலைப்பாதையில் நடந்து செல்பவர்களுக்கு மாலை 5 மணிக்கு மேல் நடை பாதையில் அனுமதி கிடையாது, என வனத்துறையினர் தெரிவித்துள்ளார். 

பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வனத்துறையினர் ஒலிபெருக்கி மூலம் யானை நடமாடும் பகுதிகளுக்கு சென்று எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று, கோவை மருதமலை சாலையில் உள்ள ஐ.ஓ.பி காலனி பகுதியில் உள்ள சாலையோரம்  யானைகள் குட்டிகளுடன் கூட்டமாக சென்று கொண்டிருந்தனர். 

அப்போது, சாலையின் நடுவே நின்று ஒன்றுக்கொன்று துதிக்கையால் குட்டி யானைகள் தழுவி விளையாடி கொண்டிருந்ததை அந்த பகுதிகளில் உள்ளவர்கள் வீட்டில் இருந்தபடி செல்போனில் புகைபடம் மற்றும் வீடியோ எடுத்து காட்சிகளை சமூக வலைதளங்களில் பகிர்ந்து தற்போது வைரலாகி வருகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

maruthamalai elephants baby playing on the road


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->