மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை - காரணம் என்ன? - Seithipunal
Seithipunal


வங்கக்கடலில் உருவாகி இருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக ராமேசுவரம் மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளதாவது:- "சென்னை வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பின்படி இலங்கை கடற்பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்ட லம் உருவாகி இருக்கிறது. இதனால், அதிக கனமழையும், மணிக்கு 35 முதல் 45 கி.மீ. வேகத்திலும் இடையிடையே 55 கி.மீ. வேகம் வரை பலத்த சூறாவளி காற்று வீசக்கூடும்.

இதன் காரணமாக ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட கடல் பகுதியில் மீன்பிடிப்பில் ஈடுபட்டுள்ள அனைத்து மீன்பிடி படகுகளும் கரைக்குத் திரும்ப அறிவுறுத்தப்பட்டுள்ளன. மீனவர்கள் விசைப்படகுகளை ஒன்றுக்கொன்று இடைவெளி விட்டு நங்கூரமிட்டு நிறுத்தவும். நாட்டுப் படகுகள் பாதுகாப்பாக நிறுத்த வேண்டும்.

கடலுக்கு செல்வதற்கான அனுமதி டோக்கன் விசைப்படகு மீனவர்களுக்கு வழங்கப்படவில்லை. அதனால் ராமேசுவரம், பாம்பன், மண்டபம், தங்கச்சிமடம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படகுகள் இன்று கடலுக்கு செல்லவில்லை. இதையடுத்து மீனவர்கள் தங்களது படகுகளை கரை பகுதியிலும், கடலிலும் போதிய இடைவெளியில் நங்கூரமிட்டு நிறுத்தி வைத்துள்ளனர்.

இந்த அறிவிப்பினை மீறி கடலுக்கு செல்லும் மீனவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர். அதிகாரிகளின் இந்த அறிவிப்பால் மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் அதனை நம்பியுள்ள ஏராளமானோர் வேலையிழந்துள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

fishermans not allowed to beach for cyclone


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->