மார்க்சிஸ்ட் கண்டனம்!!! போலீசாரின் செயல்கள் படும் மோசம்!!! - Seithipunal
Seithipunal


சென்னையில், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். மாதர் சங்க மாவட்ட தலைவர் பாப்பாத்தியை போலீசார் விடுவிக்க மறுத்து தகராறு செய்தது மிக மோசமான செயலாகும். இதுகுறித்து அந்த அறிக்கையில் அவர் கூறியதாவது, " குழந்தைகள், பெண்கள் மீது அதிகரித்து வரும் வன்முறைகளைத் தடுக்க அரசுத் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும், பாதிக்கப்பட்டவர்களையே குற்றவாளியாகக் குற்றம் செய்தவர்களைப் பாதுகாக்கும் நடவடிக்கையைக் காவல்துறை கைவிட வேண்டும், போதைப் பொருட்கள் புழக்கத்தைத் தடுக்க வேண்டும், கல்வி நிலையங்களில் பணியிடங்களில் பாதுகாப்பான சூழலை ஏற்படுத்த வேண்டும். பெண்கள் குழந்தைகள் மீதான வன்கொடுமைகளை விவாதிக்கச் சிறப்பு சட்டமன்ற அமர்வை நடத்த வேண்டும்.


அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து அனைத்தையும் ஜனநாயக மாதர் சங்கம் சென்னையில் நேற்று பேரணி நடத்தியது. மேலும் மாதர் சங்கம் நடத்திய பேரணிக்கு மார்க்சிஸ்ட் கட்சி வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதுடன், முழுமையான ஆதரவையும் தெரிவித்துக் கொள்கிறது. மாதர் சங்கத்தின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். போலீசாரின் அனுமதியுடன் நடைபெற்ற பேரணிக்கு மாநிலம் முழுவதிலும் இருந்தும் பெண்கள் சென்னைக்கு வந்தனர். அந்த முறையில் திண்டுக்கல் மாவட்ட செயலாளர் பாப்பாத்தி சென்னை பேரணியில் கலந்து கொள்ளப் புறப்பட்டபோது, எவ்வித வழக்கோ, நீதிமன்ற உத்தரவோ இல்லாமல் அவரைத் திண்டுக்கல் மாவட்ட போலீசார் வீட்டு காவலில் வைத்தது கடுமையான கண்டனத்திற்குரியது.

இதில் திண்டுக்கல் எம்.பி. சச்சிதானந்தம் தலையிட்ட பிறகும் பாப்பாத்தியை விடுவிக்க மறுத்து போலீசார் தகராறு செய்தது மிக மோசமான கடும் செயலாகும். மேலும் இதில் சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் " என அவர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Marxist condemnation The actions of the police are getting worse


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->