மாசி மகத் தீர்த்தவாரி கோலாகலம்..உற்சவ மூர்த்திகள் புறப்பாடு நிகழ்ச்சியில் நேரு MLA பங்கேற்பு!
Masi Magadh Theerthavari Celebrations Nehru MLA attends procession of deities
புதுச்சேரியில் பிரசித்தி பெற்ற மாசி மகத் திருவிழாஇன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
புதுச்சேரி மாநிலத்தில் ஆண்டுதோறும் மாசி மக திருவிழா மாசி மாதத்தில் நடைபெறுவது வழக்கம் .அந்த வகையில் இந்த ஆண்டு மாசி மக திருவிழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான கோயில்களில் இருந்து உற்சவ மூர்த்திகள் ஊர்வலமாக புதுச்சேரிக்கு வருகை தந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பர்.
அதன்படி இன்று வைத்திகுப்பம் கடற்கரையில் தீர்த்தவாரி நிகழ்ச்சியான நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பிரசித்தி பெற்ற மாசிமக திருவிழாவை முன்னிட்டு புதுச்சேரியில் உள்ள அனைத்து கோவில்களிலும் இருந்து உற்சவம் மூர்த்திகள் புறப்பட்டு கடற்கரைக்கு வந்து சேர்ந்தது. அதை தொடர்ந்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தீர்த்தவாரி நிகழ்ச்சியானது வெகு சிறப்பாக நடைபெற்றது. இது ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

அதன் ஒரு பகுதியாக இன்று உருளையன்பேட்டை தொகுதி கோவிந்தசாலை பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீதேவி அஷ்டலட்சுமி முடக்குமாரியம்மன் திருக்கோவிலில் இருந்து சுவாமி புறப்பட்டு தீர்த்தவாரிக்கு செல்லும் விழாவினை உருளையன்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் புதுச்சேரி மாநில மனிதநேய மக்கள் சேவை இயக்க நிறுவனதலைவருமானதிரு.G.நேரு(எ)குப்புசாமி MLA அவர்கள் இன்று வெள்ளிக்கிழமை காலை 8:00 மணியளவில் சாமி தரிசனம் செய்து சுவாமி கடல் தீர்த்தவாரிக்கு செல்லும் விழாவினை துவக்கி வைத்தார்.
மேலும் இந்நிகழ்ச்சியில் திருக்கோவில் நிர்வாகிகள், இளைஞர்கள்,அப்பகுதி பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர் மேலும் இவ் விழாவிற்கான ஏற்பாடுகளை உபயதாரர்கள்.திரு. Dr. B.ராஜாராம் - தமிழரசி, சுபஸ்ரீ, ஐஸ்வர்யா, லட்சுமிபாலகிருஷ்ணன்,குடும்பத்தினர் வெகு சிறப்பாக செய்திருந்தனர்.
English Summary
Masi Magadh Theerthavari Celebrations Nehru MLA attends procession of deities