உடல்நிலை குறைவால் கொத்தனார் எடுத்த விபரீத முடிவு.. சோகத்தில் குடும்பத்தினர்.! - Seithipunal
Seithipunal


உடல்நலக்குறைவால் கொத்தனார் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கடமனாங்குழி விளையில் கொத்தனாரான சுகுமாறன் (வயது 50) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கும் திருமணமாகி 2 மகள்களும் உள்ளனர். 

கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட சுகுமாறன் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனாலும் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதனால், நேற்று முன்தினம் படுக்கை அறையில் இருந்த சுகுமாறன் திடீரென அலறி சத்தம் போட்டார். அவரது சத்தத்தை கேட்ட குடும்பத்தினர் அங்கு சென்று பார்த்தனர்.

அப்போது தான் விஷம் குடித்து விட்டதாக சுகுமாறன் தெரிவித்துள்ளார். இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் உடனடியாக அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சுகுமாறன் பரிதாபமாக உயிரிழந்தார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mason commits suicide due to ill health in kanniyakumari


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->