உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி போராட்டம்.. கோடியில் நஷ்டம்.. தனியார் நிறுவனம் அதிர்ச்சி.!  - Seithipunal
Seithipunal


சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டத்தில் குன்னம் வட்டம் திருமாந்துறை பகுதியில் சுங்கச்சாவடி ஒன்று அமைந்துள்ளது. இதனை தனியார் நிறுவனம் ஒப்பந்த முறையில் நடத்தி வருகின்றது. 

இதில் பணியாற்றிய 28 பேரை அந்த தனியார் நிறுவனம் பணிநீக்கம் செய்துள்ளது. இதை கண்டித்து பணிநீக்கம் செய்யப்பட்டவர்களும், அதே சுங்கச்சாவடியில் பணிபுரிகின்ற தொழிலாளர்களும் திருமாந்துறை சுங்கச்சாவடி அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

அதுபோலவே, கள்ளக்குறிச்சி மாவட்டம், செங்குறிச்சியின் சுங்கச்சாவடியில் பணியாற்றிய 32 பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு இருக்கின்றனர். எனவே, அவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்த நிலையில், சுங்க சாவடி வேலையாட்கள் போராட்டம் செய்வதால் வாகனங்கள் கட்டணமில்லாமல் பயணித்து வருகின்றனர். இதன் மூலம் அந்த தனியார் நிறுவனத்திற்கு ரூ.1 கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

may 1 crores loss to tollgate sengurichi and thirumandurai 


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->